மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (20) காலை வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலிலிருந்து, இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர்கள் திடீரென நீக்கப்பட்டதால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
2ஆம் இடத்தில் இருந்த ரோஹித் மற்றும் 4ஆம் இடத்தில் இருந்த கோலியின் பெயர்கள் முதல் 100 இடங்களில் கூட இல்லாததால், இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டனரோ என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால், சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர், இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு (technical glitch) காரணமாக ஏற்பட்ட தவறு எனத் தெரிவித்த ஐசிசி, திருத்தப்பட்ட புதிய பட்டியலை வெளியிட்டது. அதில், ரோஹித் மற்றும் கோலியின் பெயர்கள் மீண்டும் தங்களது பழைய இடங்களில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சலசலப்பு முடிவுக்கு வந்தது. [Image collage of Virat Kohli and Rohit Sharma with the ICC logo]