(பி.ப. 02:58) நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை (SMEs) வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க ஒரு முக்கிய நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
“சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கான கடன் திட்டங்களுக்காக 5,900 மில்லியன் ரூபா (Rs. 5,900 million) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என ஜனாதிபதி தனது பாதீட்டு உரையில் தெரிவித்தார்.
இந்த நிதி ஒதுக்கீடு, புதிய தொழில்களை ஆரம்பிப்பதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விஸ்தரிப்பதற்கும், அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
