கொழும்பு: விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக, இன்று காலை 9.30 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரும் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தனர்.
நேற்று (22) இரவு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் நேற்று இரவு சிறைச்சாலைக்குச் சென்றபோதிலும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.