கொழும்பு, டிசம்பர் 02: நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக வைத்தியசாலையின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று (டிசம்பர் 01) ஆம் திகதி வைத்தியசாலைக்கான மின்சாரம் விநியோகம் மீளமைக்கப்பட்டதுடன், இன்று (02) ஆம் திகதி நீர் விநியோகமும் மீளமைக்கப்பட்டதாகச் சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், சேதமடைந்த ஏனைய வைத்தியசாலைப் பிரிவுகளும் பொதுச் சேவைகள் விரைவில் வழமைக்குத் திரும்பும் வகையில் படிப்படியாக விரைவாக மீட்கப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
