Headlines

சுமத்ரா தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை! – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

கொழும்பு, நவம்பர் 27: இன்று காலை இந்தோனேசியத் தீவான சுமத்ராவுக்கு அப்பால் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலை 10:26 மணியளவில் சுமத்ராவுக்கு அப்பால் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 16 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS மேலும் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.

எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்பதை திணைக்களம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *