செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (14) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியாவில், கடந்த 3,098 நாட்களாகத் தொடரும் தமது போராட்டப் பந்தலிலேயே உறவுகள் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.