யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி, தற்காலிக இடைநிறுத்தத்தின் பின்னர் இன்று (25) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இடம்பெறும் இந்தப் பணிகளின்போது, ஏற்கனவே அகழப்பட்ட இடங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் நாளையும் (26) தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த அகழ்வுப் பணிகளின்போது, இதுவரை 150 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, இன்று பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.