கொழும்பு: ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் குழுவொன்று, இன்று (03) காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
தமது பிரச்சினைகளுக்குத் தீர்க்கமான தீர்வொன்றைக் கோரியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெற்ற போதிலும், தமது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடரும் என்று பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்தார்.
