அவுஸ்திரேலிய ஆளுநர் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான 75 வருட நட்பை வலுப்படுத்தல், ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்கல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ஆளுநர் வலியுறுத்தினார்.