Headlines

ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் சபை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

ஜனாதிபதி நிதியத்தின் (President’s Fund) ஆளுநர் குழுக் கூட்டம் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) தகவலின்படி, இந்த ஆளுநர் சபையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் என ஏழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரொஷான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜெயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *