சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவை (Kristalina Georgieva) சந்தித்துக் கலந்துரையாடினார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) கூட்டத்தொடரின் போது இடம்பெற்ற இந்த முக்கிய கலந்துரையாடலில், தொழில் அமைச்சரும், நிதிப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் IMF திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
