Headlines

டிட்வா சூறாவளி பாதிப்பு: இலங்கைக்கு மியான்மர் 500 மெட்ரிக் தொன் அரிசி நிவாரண உதவி!

டிட்வா சூறாவளியால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மர் அரசாங்கம் இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த அரிசித் தொகுதி இன்று (09) இலங்கைக்கான மியான்மர் தூதுவர் மார்லர் தான் ஹடைக் (Marlar Than Htaik) அவர்களால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

டிட்வா சூறாவளியின் தாக்கத்தினால் நாட்டின் பயிர்நிலங்களில் கிட்டத்தட்ட 20 வீதமானவை சேதமடைந்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இதன்போது தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மியான்மர் அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய நிதியுதவிக்கு மேலதிகமாகவே இந்த 500 மெட்ரிக் தொன் அரிசியையும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *