Headlines

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8: பல்லேகலையில் இன்று இலங்கை – இங்கிலாந்து அனல் பறக்கும் மோதல்!

கண்டி, பிப். 22: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மிக முக்கியமான போட்டி இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிகவும் നിര്‍ணாயகமானது என்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து:

இதற்கிடையில், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியாக நேற்று (21) கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தார். எனினும், அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஆட்டத்தைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *