Headlines

தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு: ஒரு பவுன் 4 இலட்சத்தைத் தாண்டியது!

(கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக இலங்கையின் உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று (28) பாரியளவில் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,250 அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளது.

இந்த உலகளாவிய விலை மாற்றத்தின் எதிரொலியாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய விலைப் பட்டியலின்படி, தங்கப் பவுன் ஒன்றின் விலையில் ஒரே நாளில் மொத்தமாக 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, 24 கரட் தூய தங்கப் பவுன் ஒன்றின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4 இலட்சம் ரூபா எல்லையைக் கடந்துள்ளது. நேற்றைய தினம் 394,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஆபரணத் தங்கமான “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்றைய தினம் 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *