கொழும்பு: கடந்த ஏழு நாட்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், இன்று (24) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், டொக்டர் நளின் ஜயதிஸ்ஸவுடன் இன்று நடத்திய வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பல்வேறு தபால் தொழிற்சங்கங்கள் இணைந்து, 19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17ஆம் திகதி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தன. இதனால், கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் தபால் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.