கொழும்பு: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
தனது பிடியாணையை இடைநிறுத்தக் கோரி அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மீளாய்வு மனு நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், பிடியாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து, நீதவான் நீதிமன்றம் விடுத்திருந்த அழைப்பாணைக்கு அமைய, அவர் இன்று மன்றில் ஆஜரானார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில், கொரிய நிறுவனம் ஒன்றுக்கு சட்டவிரோதமாக மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு 262 இலட்சம் (26.2 மில்லியன்) ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.