(திருகோணமலை) – திருகோணமலை, போதிராஜ விகாரையில் கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையொன்றை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சந்தேகநபர்களான நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு தனிநபர்கள் என மொத்தம் பத்து பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியற்ற முறையில் சிலை வைத்தமை தொடர்பாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
