Headlines

திருகோணமலை: புத்தர் சிலையொன்றை நிறுவிய விவகாரத்தில் கைதான 4 பிக்குகள் உட்பட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

கடலோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் ஆறு பேர் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *