Headlines

நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை மேலும் தொடரும்! – 100 மி.மீ. வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

கொழும்பு, நவம்பர் 23: தீவு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தீவின் ஏனைய பகுதிகளில் இன்று (நவம்பர் 23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *