கொழும்பு: நாடு முழுவதும் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 24 மணி நேரத்திற்குள் 689 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 24 பேரும், நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 400 பேரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 100 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,635 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.