Headlines

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: ஒரே நாளில் 1,000க்கும் மேற்பட்டோர் கைது! – பொலிஸ் அதிரடி!

கொழும்பு, நவம்பர் 23: “நாடு ஒன்றிணைந்தது – தேசிய இயக்கம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய நடவடிக்கையின் போது நேற்று (நவம்பர் 22) 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது, பொலிஸார் 319 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 585 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine), 2 கிலோகிராம் 586 கிராம் ஹஷிஷ், கொக்கைன் மற்றும் பல நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக 21 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர். அதேவேளை, மேலும் 29 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *