Headlines

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம் – நுவரெலியாவில் உறைபனிக்கு வாய்ப்பு!

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையில் நாளை (23) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும்.

நுவரெலியாவில் உறைபனி: நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் சில இடங்களில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பனிமூட்டம்: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை (Misty conditions) காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *