பண்டாரகம: பண்டாரகம, துன் போதிய பாலம் அருகே, சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி, காரில் பயணித்த நபர் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.