கொழும்பு: எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தேவையான அளவு எரிபொருள் கையிருப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், போதுமான அளவு எரிபொருள் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்தியர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக, 30,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 5,200 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோல் ஆகியவற்றை ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, 35,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி வந்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
