மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘செம்மஞ்சள்’ (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (31) நண்பகல் 12:00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த அறிவிப்பானது, இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும்.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
