கொழும்பு: “நீதி இல்லை என்றால், அமைதி இல்லை! பலஸ்தீனை வாழவிடு!” என்ற தொனிப்பொருளில், ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று (20) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அருகில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
மத பேதங்களைக் கடந்து, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். “பலஸ்தீனை விடுதலை செய்”, “போரை நிறுத்து, இனப்படுகொலையை நிறுத்து”, “இஸ்ரேல் ஒரு பயங்கரவாத அரசு” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது குரல் ஓயாது என அவர்கள் தெரிவித்தனர்