கொழும்பு: மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் நேர் மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12.11 மணியளவில், குமுழமுனை, பட்டிநட்டம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று, வெத்தப்பளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு நேர் மேலே சூரியன் காணப்படும்.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.