பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்”: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று (15) புதுடெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் “அணு ஆயுத மிரட்டல்களுக்கு” இந்தியா இனி அஞ்சாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்ட அவர், அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வெற்றியால் பாகிஸ்தான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றார். குற்றவாளிகள் கற்பனைக்கு எட்டாத வகையில் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் உரைக்குப் பின்னர், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் குங்குமப்பூ நிறக் கொடியை ஏந்தியபடி பறந்து, மக்கள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *