சென்னை: பிரபல நடிகை கஸ்தூரி, இன்று (16) பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டார். சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்து அவர் கட்சியில் சேர்ந்தார்.
அவருடன், திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்துள்ளார்.
சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கஸ்தூரி, கடந்த சில காலமாகவே பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தார். இந்து மதம் தொடர்பான விடயங்களில் தீவிரமாகக் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், அவரது இந்த அரசியல் பிரவேசம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஏற்கனவே குஷ்பு, நமீதா போன்ற நடிகைகள் பாஜகவில் உள்ள நிலையில், தற்போது கஸ்தூரியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.