கொழும்பு, நவம்பர் 28: மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டத்திற்காகப் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகள் ஆரம்பத்தில் டிசம்பர் 08 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள் திறக்கப்படுவதை ஒத்திவைக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டத்திற்காகப் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
இதே ஊடகவியலாளர் சந்திப்பின் போது, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (A/L) பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டது.
