கொழும்பு, டிசம்பர் 03: பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுதல், அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குதல் மற்றும் அனர்த்தத்தினால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளைச் சீரமைத்தல் ஆகியவை தேசிய முன்னுரிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், இந்த அவசர காலப்பகுதியில் முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய அர்ப்பணிப்புடனான ஆதரவையும் பிரதமர் பாராட்டினார்.
