Headlines

பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை! வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட “பலிங்கு ரேண” நாடகம்!

கொழும்பு: இலங்கை பாராளுமன்ற வளாகத்தில், அதன் வரலாற்றில் முதல் முறையாக, கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற குழு ஒரு நாடக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

‘Wingfield Family’ என்ற புகழ்பெற்ற நாடகத்தின் சிங்களப் பதிப்பான “பலிங்கு ரேண” (Balingu Rena) நாடகம், ஒக்டோபர் 23 ஆம் திகதி (வியாழக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வழமையாக அரசியல் விவாதங்கள் மற்றும் சட்டமியற்றும் நடவடிக்கைகளின் மையமாக விளங்கும் பாராளுமன்ற வளாகத்தில், இவ்வாறான ஒரு கலை நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். இது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய கலாச்சார மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *