மும்பை: உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரரான ‘தி அண்டர்டேக்கர்’, சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக இணையத்தில் செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன.
மல்யுத்த உலகில் 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி, கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அண்டர்டேக்கர், தனது அமைதியான ஆனால் மிரட்டலான ஆளுமையால் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு புதிய ஆட்டத்தைக் கொண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சல்மான் கானுக்கும் அவருக்கும் இடையிலான உரையாடல்களும் நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தி உண்மையானால், இது பிக் பாஸ் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதுடன், நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கையையும் விண்ணை முட்டச் செய்யும். இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்