கொழும்பு: பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாகத் தவறான செய்தியை ஒளிபரப்பிய ‘ஹிரு’ தொலைக்காட்சிக்கு எதிராக, குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகம் செய்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
முன்னதாக, இந்தச் செய்தியை முற்றாக மறுத்திருந்த பிரதமர் அலுவலகம், ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.