சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் 9ஆவது சீசன், வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. கடந்த சீசனைத் தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோஸ்டார் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி இது குறித்து அறிவிக்கையில், “இந்த முறை போட்டியாளர்களாக சில சமூக ஊடக பிரபலங்களும் பங்கேற்பார்கள். மேலும், ஹாட்ஸ்டார் பார்வையாளர்கள், போட்டியாளர்கள் குறித்து நேரடியாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் புதிய வசதியும் வழங்கப்படும்” என்றார். இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்கவுள்ளனர்.
கடந்த சீசனில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான தொகுப்பு முறை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அவர் மீண்டும் தொடர்வது நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.