கொழும்பு, ஆகஸ்ட் 12: நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்புப் பேரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்புப் பேரவை இன்று (12) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திரு. பிரியந்த வீரசூரிய, இதுவரை பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த நிலையில், இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.