கொழும்பு: இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2000 ரூபாய் பெறுமதியான புதிய நினைவு நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் நாணயத்தாளை, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்துக் கையளித்தார்.
“சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை” என்ற தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயத்தாள், பொதுப் புழக்கத்திற்கானது என்பதுடன், மத்திய வங்கியால் வெளியிடப்படும் 5ஆவது நினைவு நாணயத்தாள் இதுவாகும். பொருளாதார ஸ்திரத்தன்மையின் மூலம் தேசிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
One thought on “புழக்கத்திற்கு வந்தது புதிய 2000 ரூபாய் நாணயத்தாள்”