தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘இர்னா’ தெரிவித்துள்ளது.
மினாப் நகர அதிகாரி முகமது ராத்மெஹ்ர் இது குறித்துக் கூறுகையில், இஸ்ரேல் இன்று காலை “பள்ளியை நேரடியாகத் தாக்கியது” என்று இர்னா மேற்கோள் காட்டியுள்ளது.
தாக்குதலின் போது பள்ளியில் 170 மாணவர்கள் இருந்தனர் என்று அவர் கூறினார். மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
