சென்னை, ஜனவரி 16: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாததால், இந்தாண்டு பொங்கல் தியேட்டர் கொண்டாட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அந்தப் புகாரைப் போக்க ஓடிடி தளங்கள் களமிறங்கியுள்ளன. “வீட்டிலேயே திருவிழா” என்ற கோஷத்துடன், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் பல்வேறு ஜானர்களில் (Genres) படங்களும், வெப் தொடர்களும் வெளியாகியுள்ளன.
ஓடிடி பொங்கல் ஸ்பெஷல் லிஸ்ட்:
- ஷெல் (Shell): வயதைக் குறைக்கும் மருத்துவ சிகிச்சையின் பின்னால் மறைந்திருக்கும் பயங்கர உண்மைகளை வெளிக்கொணரும் சயின்ஸ்-த்ரில்லர். ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.
- தி ரிப் (The Rip): கைப்பற்றப்பட்ட பெரும் தொகையால் போலீஸ் குழுவுக்குள் ஏற்படும் துரோகம், பேராசை, உயிர் போராட்டம் எனப் பரபரப்பான க்ரைம் த்ரில்லர். விறுவிறுப்பான திரைக்கதை இதன் பலம்.
- தஸ்கரி (Thaskari): விமான நிலையத்தை மையமாகக் கொண்ட சர்வதேசக் கடத்தல், சுங்கத்துறை அதிகாரிகளின் ஆபத்தான பணி என நிஜத்திற்கு நெருக்கமான வெப் தொடர். ஒவ்வொரு எபிசோடும் அடுத்ததை பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
- மகாசேனா (Mahasena): தேனி குரங்கணி மலைப்பகுதியை பின்னணியாகக் கொண்ட, புராணக் கதை கலந்த ஆக்ஷன் த்ரில்லர். புனித ‘யாளி’ சிலையைக் காக்க நடக்கும் போராட்டம், தந்தை-மகள் பாசம் என காட்சிகள் வித்தியாசமாக உள்ளன.
- பா. பா. பா. (Pa. Pa. Pa.): பணம் கேட்காமல் நீதியைக் கேட்கும் வித்தியாசமான கடத்தல் கதை. அரசியல் சாடல்களுடன் கூடிய ஆக்ஷன்-காமெடி என்டர்டெயினர்.
- Can This Love Be Translated: மொழிபெயர்ப்பாளருக்கும், உலகப் புகழ் நட்சத்திரத்திற்கும் இடையேயான காதலைச் சொல்லும் க்யூட்டான கொரியன் ரொமாண்டிக் காமெடி தொடர்.
- அனந்தா (Anantha): ஆன்மீகம், மனித வாழ்க்கை, நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் அமைதியான படம். பொங்கல் நாளில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற ஃபீல் குட் மூவி.
தியேட்டரில் பெரிய படங்கள் இல்லாத குறையை, இந்த ஓடிடி ரிலீஸ்கள் நிச்சயம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
