கொழும்பு: பொரளை பொலிஸ் பிரிவில், மடோல்பாம் சந்திக்கும் டி. எஸ். சேனாநாயக்க சந்திக்கும் இடைப்பட்ட வீதியில் திடீரெனப் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதால், கொழும்பை நோக்கிய போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள போக்குவரத்துத் திருப்பங்கள்:
- மடோல்பாம் சந்தியிலிருந்து வரும் வாகனங்கள், கனத்தை சுற்றுவட்டம் வழியாக பேஸ்லைன் வீதியைப் பயன்படுத்தலாம்.
- ராஜகிரிய பகுதியிலிருந்து கொழும்பு வரும் வாகனங்கள், ஆயுர்வேத சுற்றுவட்டம் வழியாக கோட்டா வீதியைப் பயன்படுத்தலாம்.
- கொழும்பிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வீதிக்குச் செல்லும் வாகனங்கள், டி. எஸ். சேனாநாயக்க சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி மற்றும் கோட்டா வீதி வழியாகச் செல்லலாம்.
பாதிக்கப்பட்ட வீதி புனரமைக்கப்படும் வரை, வாகன நெரிசலைத் தவிர்க்க இந்த மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.