Headlines

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: நேற்று ஒரே நாளில் 1,284 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு, நவம்பர் 10: நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “தேசம் ஒன்றிணைந்த – தேசிய செயற்திட்டம்” (“Nation United – National Drive”) பிரச்சாரத்தின் கீழ், நேற்று (நவம்பர் 10) நடத்தப்பட்ட 1,000 சுற்றிவளைப்புகளில் மொத்தம் 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நடவடிக்கைகளின் போது 07 கிலோ 21 கிராம் ஹெரோயின் மற்றும் 04 கிலோ 715 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (பொதுவாக ‘ஐஸ்’ என அழைக்கப்படும்) மற்றும் ‘ஹசீஷ்’ உள்ளிட்ட பல சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 16 பேருக்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 15 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, “தேசம் ஒன்றிணைந்த – தேசிய செயற்திட்டம்” பிரச்சாரம் தொடங்கப்பட்ட ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் இதுவரை 12,000 க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *