இலங்கையின் முன்னணி ஓட்டப்பந்தய வீரரான யுபுன் அபேகோன், போலந்தில் நடைபெற்ற சிபிக்னியூ லூத்விகோவ்ஸ்கி உலக மெய்வல்லுநர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் பந்தய தூரத்தை 10.36 விநாடிகளில் நிறைவு செய்து, புதிய போட்டி சாதனை ஒன்றையும் நிலைநாட்டினார்.
வெற்றிக்குப் பிறகு கருத்து தெரிவித்த யுபுன், “தூக்கமில்லாத இரவுகள் மற்றும் கடினமான பயணங்களுக்கு மத்தியிலும், உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்குடன் ஓடினேன்,” என்றார்.
“போட்டி சாதனையை முறியடித்து, நேரக் காட்டிப் பலகையில் இலங்கைக் கொடியை காண்பித்ததில் பெருமை அடைகிறேன். இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு ஐரோப்பாவிலும் ஜொலிக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளோம். அதற்காகவே நாங்கள் இங்கு இருக்கிறோம்,” எனவும் அவர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
