மன்னார் காற்றாலைத் திட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டால், அத்திட்டம் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளதாக மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பல நாட்களாகத் தொடரும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று (13) மாலை ஜனாதிபதியைச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
திட்டத்தை மீளாய்வு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திறமையான அதிகாரிகளின் கீழ் திட்டம் முறையாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்ததாக எம்.பி.க்கள் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டனர்.