இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாரம்பரிய அரசியல் பாணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தனது தலைமையை உருவாக்கி வருகிறார். நேற்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற ‘சி
மாற்றுத் திறனாளிகளின் கலைத்திறனைப் பாராட்டும் இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி தனது அதிகாரப் பதவியின் மேலோங்கிய தோற்றத்தை ஒதுக்கி வைத்து, சாதாரண மனிதனாக நடந்து கொண்டதைக் கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். இதன்போது விருது வழங்கும் போது மாற்று திறனாளி ஒருவருடன் புகைப்படம் எடுக்கும் போது, அரச தலைவர் என்ற நிலையை கடந்து, முட்டிக்காலில் அமர்ந்திருந்து திறமையாளரை மகிழ்வித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதி இவ்வளவு இயல்பாக, மக்களோடு இணைந்து நடந்து கொள்வதைக் காண்கிறோம். இந்த எளிய, ஆனால் ஆழமான மனிதநேய செயல், திசாநாயக்க
சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வு ‘ராஜதந்திரத்தின் புதிய வரையறை’, ‘உண்மையான மக்கள் தலைவர்’ போன்ற பல்வேறு பட்டங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.
இந்த எளிமையான நடவடிக்கை, இலங்கையின் அரசியல் களத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்