கொழும்பு: பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில், சட்டவிரோதமாக மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 262 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாகவே அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.