கொழும்பு: முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவில் இன்று (20) காலை சமூகமளித்துள்ளார்.
எந்த விடயம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது என்பது குறித்த மேலதிகத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.