மன்னார் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மூடைகளுடன் டிங்கி படகு ஒன்றை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.
குறித்த படகில் அப்போது இரண்டு பேர் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேக நபர்கள் தற்போது கரைக்கு அழைத்து வரப்படுவதுடன், அங்கு கைப்பற்றப்பட்ட மூடைகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
