சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம், உலகமெங்கும் இன்று (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கான முன்பதிவு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் முதல் கட்ட தகவல்கள், இப்படம் முதல் நாளிலேயே ₹100 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஒரு தொடக்கமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி உருவாக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்புகளுடன், இப்படத்தின் பான்-இந்திய வர்த்தகமும் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நாகார்ஜுனா, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் உபேந்திரா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருப்பது, மற்ற மாநிலங்களிலும் படத்திற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சிகளில் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில், ‘லியோ’ படத்தின் முதல் நாள் சாதனையை ‘கூலி’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.