கொழும்பு: அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) பிணை வழங்கியுள்ளது.
இன்று காலை முதல் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, சட்டமா அதிபர் திணைக்களம் பிணை வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், நீதிமன்றம் இந்தப் பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்ட அவர், உடல்நலக் குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.