கொழும்பு: ‘அரகலய’ போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் கீழ், அவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி CIDயினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.